பிரான்ஸிலிருந்து நாடு திரும்பிய தந்தையும் மகளும் விமான நிலையத்தில் கைது

25 வருடங்களுக்குப் பின் பிரான்ஸிலிருந்து நாடு திரும்பிய தந்தையும் மகளும் விமான நிலையத்தில் கைது
பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தந்தையும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதில், அ. தியாகராஜா (வயது-52) மற்றும் தி. ஜனனி (வயது-24) ஆகிய இருவருமே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து கடந்த 25 வருடங்களுக்கு முன் குறித்த தந்தையும் மகளும் பிரான்ஸ் சென்றுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக விமான நிலைய அதிகாரியை தொடர்பு கொண்ட போது,

இவ்வாறு வந்து இறங்கியபோது கைதாகிய தந்தையையும் மகளையும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

0 Kommentare:

Kommentar veröffentlichen