புலிகளின் கடல்அணிகள் பெரும் கடல்அரண் ஒன்றை உருவாக்கியிருந்ததன் விளைவாக அன்னிய அத்துமீறல்கள் எதுவுமே இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிகழவில்லை. – பரணி கிருஸ்ணரஜனி

புலிகளின் ஆட்சிக்காலத்தில் தமது கடற்பாதுகாப்பு குறித்து, சீனாவின் கடல் அத்துமீறல் குறித்து இந்தியா கிஞ்சித்தும் கவலைப்பட்டது கிடையாது.. புலிகளின் கடல்அணிகள் பெரும் கடல்அரண் ஒன்றை உருவாக்கியிருந்ததன் விளைவாக அன்னிய அத்துமீறல்கள் எதுவுமே இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிகழவில்லை.


சுயநலனும், குறுகிய நோக்கமும் கொண்ட இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தூரநோக்கற்று செயற்பட்டடு தமிழர்களை அழித்ததனூடாக புலிகளின் கடல் அணையை உடைத்து தமக்கு தாமே உலை வைத்துவிட்டு இன்று சிங்களத்திடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்திய கொள்கை வகுப்பாளர்கள் போல முட்டாள்கள் உலகத்தில் யாரும் கிடையாது.. ஒரு நாட்டின் கொள்கை வகுப்பாக்கம் தூர நோக்கில் இருக்க வேண்டுமேயொழிய சமகால நிகழ்வுகளை முன்வைத்து பழிவாங்கும் – மறுத்தான் கொடுக்கும் கொள்கைவகுப்பாக்கம் அதன் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் உதவாது என்பது வெளிவிவகார கொள்கை வகுப்பாக்கம் சொல்லும் எளிய பாடம்.

ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அதை மறந்தார்கள்.
தமிழர்களுக்கும் இந்திய அரசிற்கும் இடையில் நடந்த சில துன்பியல் நிகழ்வுகள் ஒரு தற்செயல் நிகழ்வு. அது எந்த திட்டமிடலும் இல்லாமல் நடந்த சடுதியான ஒரு எதிர்வினை. அது ஒரு திட்டமிடப்பட்ட வன்மம் இல்லை. எனவே இருதரப்பு நலன்களையும் கருத்தில் கொண்டு தூர நோக்கில் இந்தியம் தமிழர்களின் நேசக்கரத்தை இறுகப் பற்றியிருக்க வேண்டும்.
ஆனால் சில மோசமான தனிநபர்களின் கொள்கை வகுப்பாக்கம் இன்று இந்தியத்தை சிங்களத்திடம் நிரந்ரமாக பிச்சை எடுத்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

தவறான வெளிவிவகாரக் கொள்கை அதை முன்னெடுக்கும் நாட்டை ஆபத்தான பாதையில் இட்டுச் செல்லும் என்பதுடன் அந்த நாடு தனிமைப்படுத்தப்படும் ஆபத்தையும் பிற நெருக்குதல்களையும் சந்திக்க வேண்டிவரும் என்பதை மறந்து ராஜீவ்–ஜே.ஆர் ஒப்பந்தம் முதல் 2009 தமிழின அழிப்பு வரை இந்தியா செயற்பட்டு இன்று ஒரு இக்கட்டில் நிற்கிறது.
‘புலிகளின் கடல் அரண்‘ உடைந்து போனதால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினூடாக சீனா தென்புறத்தினூடாக பாகிஸ்தான், இந்தியாவை வளைக்க முற்படுகின்றன. இதற்கு சிங்களம் உடந்தையாக இருப்பது குழந்தைகளுக்கும் தெரியும்.

தமிழர்கள் நேசசக்தி என்ற வரலாற்று உண்மையை உணர்ந்து தமிழீழத்தை அங்கீகரிப்பதனூடாக தனது அனைத்து நெருக்கடிகளிலிருந்தும் இந்தியா தப்ப முடியும். இந்தியா சிந்திக்குமா?
அல்லது படிப்படியாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் தனது பிடியை முழுயைமாக இழந்து தனிமைப்படப்போகிறதா? அல்லது தவணைமுறையில் கொழும்பு சென்று பிச்சை எடுத்துக்கொண்டு வரப்போகிறதா இந்தியா?

0 Kommentare:

Kommentar veröffentlichen