சீன ஆதிக்கத்தை உடைக்கும் வண்ணம் அமெரிக்க கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு பிரசன்னம்



அமெரிக்காவின் கடற்படையின் பசுபிக் பிராந்திய கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகப்பகுதி சென்றுள்ளது.
இதனை அமெரிக்கா தூதரகம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த அமெரிக்க கப்பலின் பிரசன்னம் அமைந்துள்ளதாக இந்திய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரக தகவல்படி, அமெரிக்க பசுபிக் பிராந்திய போக்குவரத்து கப்பலான “யுஎஸ்என்எஸ் போல் ரிவர்” ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ளது.

இந்தக்கப்பல், இன்று முதல் மார்ச் 18ஆம் திகதிவரை ஹம்பாந்தோட்டையில் தரித்திருக்கும்.
இதன்போது ஜப்பான், அவுஸ்திரேலியா, இலங்கை உட்பட்ட நாடுகளின் இராணுவத்தினருடன் இணைந்து 12 நாட்களிலும் கூட்டுப்பயிற்சிகளிலும் அமரிக்க கப்பல் ஈடுபடவுள்ளது.

அத்துடன் குறித்த 12 நாட்களிலும் கப்பலில் பணியாற்றும் பணியாளர்கள் பல்வேறு நற்பணிகளிலும் ஈடுபடவுள்ளனர்.
இந்தநிலையில் அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய நட்பு நிலையம் தொடர்ந்தும் இலங்கைக்கு மனிதாபிமான ஏற்பாடுகளில் உதவும் என்று அமரிக்க தூதுவர் அடுல் கெசாப் தெரிவித்துள்ளார்

0 Kommentare:

Kommentar veröffentlichen