பறிபோகின்றது கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்ல காணி!

கரைச்சிபிரதேச சபை தனக்குரியதென உரிமை கொண்டாடிய கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்ல காணியை ஆக்கிரமித்து சிலர் புதிய வேலிகளை இன்று அமைத்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலர் அங்கு வீரச்சாவடைந்த மாவீர செல்வங்களிற்கு பொது நினைவு தூபி அமைக்க முற்பட்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக கரைச்சி பிரதேச சபையின் தலையீட்டினால் நிர்மாணப்பணிகள் தடைப்பட்டதுடன் குறித்த முன்னாள் போராளிகள் நீதிமன்ற படியேறவேண்டியேற்பட்டதுடன் அவர்கள் புலனாய்வு கட்டமைப்பின் கண்காணிப்பு வளையத்தினுள் கொண்டுவரப்பட்ருந்தனர்.
தற்போது கட்டுமானப்பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்ல காணியினிலேயே புதிய எல்லை வேலிகள் சிலரால் அமைக்கப்பட்டுவருகின்றது.

எனினும் தற்போது கரைச்சி பிரதேச சபையினர் இதுவரை கண்டுகொள்ளவில்லையென மேலும் தெரியவருகின்றது.


0 Kommentare:

Kommentar veröffentlichen