தமது வீடுகள் எப்படி இருக்கும் என கேப்பாப்புலவுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், ஓவியங்களை வரைந்துள்ளனர்.
இவ்வோவியங்களில் முட்கம்பி வேலிகளுக்குள்ளும் இராணுவ முகாமுக்கு அருகிலும், தமது வீடுகள் இருப்பது போன்றே இச்சிறுவர்கள் தமது வீடுகளை வரைந்துள்ளனர்.
அவ்வோவியங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கேப்பாப்புலவுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள், ஆசிரியர்களால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Kommentare:
Kommentar veröffentlichen